top of page

கதவு

  • Writer: sivabrahmmam96
    sivabrahmmam96
  • Feb 1, 2016
  • 2 min read

க = கற்பனை - IMAGINATION

த = தர்க்கம் - LOGIC

வு = உணர்ச்சி - செண்டிமெண்ட்

இந்த உலகத்தில் 3 விதமான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1.கற்பனை

2.தர்க்கம்

3.உணர்ச்சி

1. கற்பனை : IMAGINATIVE MIND :

இந்த கற்பனை பிரிவில் வாழ்பவர்களின் சிந்தனை சதா எந்நேரமும் கற்பனை செய்து கொண்டே இருக்கும். இவர்கள் தான் பேசும்போதும் அல்லது பிறர் பேசும்போதும் அந்த பேச்சை அப்படியே கற்பனை செய்துகொண்டு சினிமா படம் ஓடுவது போல அந்த பேச்சின் அர்த்தத்தை காட்சியாக பார்ப்பர். எதிர்காலத்தில் நடக்கும் நன்மையான விஷயம் சொல்லும் போது மிகவும் உற்சாகமாக கானபடுவர். தீமையான விஷயங்களை இவர்களுக்கு சொல்லும்போது அப்படியே அதை உண்மை சம்பவம் போல் கற்பனை கவலையாக காட்சி அளிப்பர். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன் மாடி படி ஏறும்போது காலில் அடிபட்ட நிகழ்ச்சியை இவர்கள் தற்போது கூறும் வேளையில் அப்படியே தத்ருபமாக மாடி படி ஏறுவது போலவும், கால் தடுக்கி விழுவது போலவும் பாவனை செய்து நடந்து முடிந்த காட்சியை கண் முன்னே உண்மை போல் முகபாவத்தில் கற்பனையோடு கூறுவர்.

இந்த கற்பனா சக்தியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் திரை துறையில் இயக்குனர்களாகவும், கதை ஆசிரியராகவும், கவிஞ்சர்கலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

2. தர்க்கம் - LOGIC MIND

தர்கவாதிகள். தர்க்கம் என்றால் யதார்த்தம் ( PRACTICAL OR LOGIC ). இவர்கள் பேச்சில் தன்னம்பிக்கையும், யதார்த்த உண்மையும் கலந்து இருக்கும். இவர்கள் சாத்தியகூறுகள் (POSSIBILITIES) இருக்கும் விஷயத்தை மட்டுமே கருத்தில் ஏற்றுகொள்வர்.

உதாரணம் 20KM GST ரோட்டை 15 நிமிடத்தில் சென்றடைந்து விடலாம் என்று கூறினால் இவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 20 கி மி தூரத்தை சென்றடைய குறைந்தது 40 நிமிடமாவது ஆகும் என்றும் மேலும் வழியில் ஏராளமான டிராபிக் ஜாம் மற்றும் சிக்னல்கள் இருப்பதையும் இவர்கள் சுட்டி காட்டுவர்.

இந்த தர்க்கவாதிகள் பெரும்பாலும் நிர்வாக அதிகாரிகளாகவும், (ADMIN ) , கணக்காளர்களாகவும் -(ACCOUNTANT ), குமாஸ்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

3. உணர்ச்சி - SENTIMENT MIND

இவர்கள் எப்போதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள். சோகமான விஷயங்களை கேட்பதிலும், பார்ப்பதிலும் இவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். எங்கெங்கு பிரச்சனைகள். விபத்துக்கள் , சோகமான நிகழ்வுகள் நடந்தாலும், தொலைகாட்சியிலும், செய்தி தாளிலும், பாவமான, அழுகையான, துக்ககரமான நிகழ்வுகளுக்கு இவர்கள் மிகுந்த அக்கறையோடு முன்னுரிமை கொடுத்து அந்த விஷயங்களை மற்றவரிடம் பறை சாற்றி புலம்பிக்கொண்டே இருப்பர். இவர்கள் வாயில் இருந்து எப்போதும் ஐயோ பாவமே, அட கடவுளே, ஐயையோ , அச்சச்சோ, சனியனே போன்ற வார்த்தைகளை நாம் அன்றாடம் கேட்கலாம்.

உணர்ச்சி பிரிவில் பிறந்த மனிதர்கள் பெரும்பாலும் மருத்துவ துறையிலும், நர்சுகலாகவும், ஆயம்மாவகாளாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

கற்பனை சிந்தனையாளர்கள் : பெரும்பாலும் மேலே பார்த்து பார்த்து பேசுவர்

தர்க்க சிந்தனையாளர்கள் : பெரும்பாலும் நேரடியாக பார்த்து பார்த்து பேசுவர்

உணர்ச்சி சிந்தனையாளர்கள் : பெரும்பாலும் கீழேய பார்த்து பார்த்து பேசுவர்

கற்பனை மனிதர்கள் எப்போதும் கற்பனை வாதிகளிடமே அதிக நட்பு கொள்ள முயற்சிப்பர்.

மற்ற இரு பிரிவினரின் பேச்சோ, செயலோ இவர்களுக்கு சுத்தமாக புரியாது, பிடிக்காது. அதே போல் தர்க்க மனிதர்களின் நட்பும் தர்க்க மனிதர்களிடமே இருக்கும். மற்ற பிரிவினரின் பேச்சோ, செயலோ இவர்களுக்கு புரியாது. உணர்ச்சி வயப்பட்ட மனிதருக்கும் இதே எண்ணம் தான் வேலை செய்யும்.

இது தான் வாழ்வின் மிக பெரிய பிரச்சனை. நாம் திருமணம் செய்யும்போது நல்ல வேலை இருக்கிறதா, பணம் இருக்கிறதா, பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து திருமணம் செய்து வைக்கின்றோம். ஆனால் இந்த மூன்று பிரிவுகளான க - த - வு கற்பனை - தர்க்கம் - வுணர்ச்சி நிலையில் மனிதர்கள் வேறுபடுவதால் பெரும்பாலான குடும்பங்களில் மாற்று கருது ஏற்பட்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கற்பனை சிந்தனை உடைபவர்களையும், உணர்ச்சி சிந்தனை உடைபவர்களையும் நாம் கையாள்வது மிகவும் கடினம். தர்க்கம் சிந்தனையாளர்களால் மட்டுமே இந்த இரு பிரிவினரையும் புரிந்து கொள்ளவும் முடியும். இவர்களை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வைக்க முடியும்.

தர்க்கவாதிகள் நினைத்தால் கற்பனை வாதிகளிடம் யதார்த்தமாக பேசாமல் கற்பனை கலந்து நல்ல விஷயங்களை நம்பிக்கையோடு பேசினால் இவர்களை கற்பனைவாதிகள் ரசித்து இவர்கள் சொல்வதை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

தர்க்கவாதிகள் நினைத்தால் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வாழ்பவர்களிடம் யதார்த்தமாக பேசாமல் உணர்ச்சியை கலந்து நம்பிக்கையோடு நல்ல விஷயங்களை பேசினால் இவர்களை உணர்ச்சி வயப்பட்ட மனிதர்கள் நம்பி, ரசித்து இவர் சொல்வதை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

கற்பனை - தர்க்கம் - உணர்ச்சி

இந்த மூன்று பிரிவிலும் பிறந்தாலும் யாருக்கும் கெடுதல் இல்லை. இது ஒரு உணர்வின் அடிப்படையில் உருவாகும் மொழி போன்றது. இந்த உணர்வு மொழியை நாம் புரிந்து கொண்டால் அவற்றை நாம் நம் நல்ல எண்ணங்களுடன், அமைதியான, தெளிவான மனநிலையில் இவர்களை அணுகினால் இந்த மூன்று பிரிவினரையும் நாம் புரிய வைக்க முடியும். இவர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியும். குழப்பம் இல்லாமல் வாழ வைக்க முடியும். இவர்கள் வெற்றி பெறுவதற்கான ஒரு நல்ல கருவியாகவும் நாம் இருக்க முடியும்.

மூன்று பிரிவில் இருப்பவர்களும் பிறந்த இடம், சுற்று புற சூழல், வளர்ந்த விதம், பெற்றோர், பழகும் நண்பர்கள் மற்றும் கர்மா அடிபடியில் ஒருவருக்கு ஒருவர் வேருபடுகின்றனரே தவிர எல்லாரிடமும் திறமைகள் குவிந்து இருக்கின்றன.


 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2015 by Sivabrahmmam. Proudly created with Wix.com

  • Facebook Classic
  • Twitter Classic
  • Pinterest Classic
  • YouTube Classic
  • Google+ Classic
  • Blogger Classic
bottom of page