top of page

நல்லோர் தீயோர்

  • Writer: sivabrahmmam96
    sivabrahmmam96
  • Jan 24, 2016
  • 1 min read

கலியுகத்தில் தப்பு செய்பவரை கடவுள் தண்டிப்பாரா... அப்படி என்றால் நல்லவர்கள் அதிகமாக கஷ்டபடுவதும், கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும் நாம் நடைமுறையில் பார்ப்பது ஏன் ?

தப்பு செய்பவர்களை கடவுள் இன்றோ, நாளையோ, நாலு வருஷம் கழித்தோ அல்லது அடுத்த ஜென்மத்திலோ நிச்சயம் தண்டிப்பார்.

நல்லவர்கள் கஷ்டபடுவதற்கு காரணம் முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவத்தின் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கவே பிறக்கிறார்கள். இந்த ஜென்மத்தில் அவர்கள் செய்யும் நல்ல வினைக்கு ஏற்ப பிற்காலத்திலோ அல்லது அடுத்த ஜென்மத்திலோ நிச்சயம் அவர்கள் வளமாக வாழ்வது நிச்சயம்.

இவ்வுலகில் நாம் தப்பு செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என கருதுவது அவர்களின் முன் வினையில் செய்த நல்ல செயல்களே ஆகும். ஆயினும் தற்போது அவர்களின் ஒவ்வொரு செயலின் விளைவுகளையும் அவர்கள் பாவ புண்ணிய கணக்கில் ஏற்றிகொண்டேதான் இருக்கிறார்கள். மனிதனுக்கு தன்னுடைய ஆயுள் காலம் மிகபெரியதாக தெரிகிறது.. ஆனால் கடவுளுக்கோ அது மிகவும் குறைவான காலகட்டமே. பஞ்சபூதங்களின் கூட்டமைப்பான இந்த உடம்பின் இயக்கமே மனிதனின் அறிவுக்கு எட்டிய நிலை... இதை தாண்டி உயிரின் ரகசியமும், உயிரின் இயக்கமும் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது...உடல் அழியும்..உயிர் அழிவதில்லை...உயிர் ஓர் அணு ...அணு அழிவதில்லை.. உயிர் ஒரு CD போல. அந்த CDயில் அணைத்து செயல்களின் விளைவுகளும் பதிவாகிக்கொண்டே இருப்பதால் அதன் முடிவை இந்த ஜென்மத்தில் மட்டும் மனிதனாகிய நம்மால் பார்க்க, உணர முடியும். ஆனால் நம் அணைத்து ஜென்மங்களின் நிலையும் இறைவன் ஒருவனுக்கே தெரியும். மேலும் நாம் தப்பு செய்தவர் நன்றாக இருக்கிறார் என கருதுவதே தவறு. அறியாமை, அவர்கள் வாழ்க்கையின் மேலோட்டமே நமக்கு தெரிகிறது. மறைமுகமான அவர்கள் வாழ்க்கையின் ரகசியங்கள், அவர்கள் வலிகள், வேதனைகள், உணர்வுகள் பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை..

அரசன் அன்று கொல்வான் ...தெய்வம் நி............ன்.......று......கொல்லும் ???


 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2015 by Sivabrahmmam. Proudly created with Wix.com

  • Facebook Classic
  • Twitter Classic
  • Pinterest Classic
  • YouTube Classic
  • Google+ Classic
  • Blogger Classic
bottom of page