top of page
என்னுடைய தாத்தா திரு. சிவ சிதம்பர கருணாநிதி ஜோதிட வல்லுநர். அவருடைய பூர்விகம் காஞ்சிபுரம். மிக சிறந்த பாரம்பரிய ஜோதிடர்.

 

அவர் வழியில் எனது தந்தை பம்மல் திரு.M S சுப்பிரமணியன் அவர்களும் ஒரு சிறந்த ஜோதிடர். இதை எழுதும்போது அவருடைய வயது  97.  இவர் பல தினசரி நாளேடுகளுக்கும். புத்தகங்களுக்கும்   கதை, கவிதை, கட்டுரை எழுதியுள்ளார். இவர் மிக சிறந்த மேடை பேச்சாளர். அவருக்கு திருக்குறள் சுப்பிரமணியன் என்ற பேரும் உள்ளது.

 

எனது தந்தை வழியில் M S சிவகுமார் B C S  ஆகிய நானும் கடந்த 15 வருடங்களாக ஜோதிட துறையில் இருந்துவருகிறேன். இந்த ஜோதிட வழியில் நான் கற்றுக்கொண்ட முற்போக்கான விஷயங்களை கலந்து மக்கள் பயன்பெறும் வகையில் எளிமையான பரிகாரங்களும், இறைவழிபாடும், பெயர் மாற்றங்களும், ஆயுள் முழுதும் அணியக்கூடிய ராசிகற்களும், வாஸ்து முறைப்படி வீடு அமைத்து வாழும் விதமாக பயனுள்ள முறையில் ஜாதகம் மற்றும் நியூமராலஜி பலனை அறிவியல் சார்ந்த ஆன்மிக உணர்வுடன்  வழங்கி வருகிறேன்.

எனது இந்த புனித பயணத்தை  எனது குருமார்களின் ஆசியும், எனது உயிரினில் கலந்த எனது தாயின் சூட்சுமுமான உயிரின் அன்பான  ஆசிர்வாதத்தினாலும் எனது தந்தையின் அறிவினானாலும், எனது நல்ல நண்பர்களின் பேராதரவுடன் தொடங்குகிறேன்.

 

நல்ல எண்ணம்...நல்ல சொல்... நல்ல செயல்....

© 2015 by Sivabrahmmam. Proudly created with Wix.com

  • Facebook Classic
  • Twitter Classic
  • Pinterest Classic
  • YouTube Classic
  • Google+ Classic
  • Blogger Classic
bottom of page