


Services
-
Peace of Mind
-
Life Prediction
-
Marriage Compatibility
-
Numerology
-
Job, Health & Wealth
-
Hebrew Pyramid - Astro Numerology
-
Gems Prediction
-
Vasthu
-
Counselling
-
Spiritual Education for Modern Era
-
Digitally Self Remedy
-
PMA - Positive Mental Attitude

சிவபிரம்மம்
ஓர் அறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை உயிர்களுக்கு நீர் - நிலம் - நெருப்பு - காற்று - ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு அவசியமாகிறது. ஆகாயத்தில கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள் - கோள்கள் - பஞ்சபூதம் - உயிரினங்கள் ஆகிய அனைத்து இயக்கமும் சக்தி களம் (Energy) என்றும், இந்த அனைத்து இயக்கத்திற்கும் மூல காரணமாக இருப்பது சுத்தவெளி ஆகும். நமது பூமி ஒரு சூரிய மண்டலத்தில் (Solar System) உள்ளது. கோடிக்கணக்கான சூரியனின் இயக்கமே பால்வெளி மண்டலம் (Milkyway Galaxy). கோடிக்கணக்கான மண்டலங்கள் சேர்ந்து இயக்கமே வான்வெளி பிரபஞ்சம். பிரபஞ்சம் என்பது கடல் என்றால், பூமி என்பது அதில் மிதக்கும் கடுகு போல் ஆகும். மனிதன் உருவம் மிகவும் சிறியது. பிரபஞ்சம் மிகவும் பெரியது. இயங்குகின்ற அனைத்து இயக்கங்களும் இயக்கி கொண்டிருக்கும் சுத்த வெளியில் அடக்கம். "சுத்த வெளி என்பது வெட்டவெளி, சூனியம், பரலோகம், கும்மிருட்டு, ஆதி, அநாதி, பூரணம், பேராற்றல், தூயவெளி, மெய்பொருள், பரம்பொருள், பேரறிவு, முக்தி, வீடுபேரு, முழுமை பேறு, இறைநிலை, சிவம் பிரம்மம் ஆகிறது. சிவ-பிரம்மம் அணுவிலும், அண்டத்திலும், மனிதனுக்குள்ளும் இறை நிலையாக இயங்குகிறது.
















