மனிதனின் வாழ்க்கை பயணம்
- sivabrahmmam96
- Jan 24, 2016
- 3 min read

இப்பூவலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் எதை நோக்கி பயணம் செய்கின்றான் என்ற கேள்வி கேட்டால் ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை கூறுவார். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் பிறக்கும் போதே இறப்பை நோக்கி தான் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். இந்த உண்மையை நாம் உணர்ந்து ஏற்றுகொண்டால் நாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் உபயோகமானதாக மாற்றி வாழலாம். ஆனால் நாம் வாழ்க்கையில் பாதி நேரம் தூக்கத்துடனும் மீதி நேரம் ஏக்கத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 60000 விஷயங்களை நம் எண்ணங்கள் மூலம் நாம் நினைத்து கொண்டிருப்பதாக உளவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு குழப்பமும், கற்பனையும் அவசியமற்றது. இதனால் உடலும், மனமும் சோர்வு அடைவது தான் மிச்சம். உயிரில் இயக்கத்தில் இருந்து வரும் ஜீவகாந்த அலை மனமாக இயங்குகிறது. மனம் உடலையும், உயிரையும் பாதுகாக்கும் கவசம். நம் மனம் அலைந்துகொண்டே இருப்பதால் உடலையும், உயிரையும் காப்பதற்கு பதில் தாக்குகின்றது. இதனால் பல நோய்கள் வருவதற்கு அமைதியற்ற மனமே காரணம்.
நம் மனம் ஒரு நொடிக்கு சுமார் 14 (CYCLES) முதல் 40 (CYCLES) என்ன சுழல்கள் வரை சுழன்று கொண்டிருக்கும். இந்த சுழல் நிலையில் தான் நமக்கு அடிக்கடி கோபம் வருகிறது. இதுவே உணர்ச்சி வயப்பட்ட நிலை. BP, SUGAR, THYROID போன்ற நோய்கள் வருவதற்கு இந்த வேகமான அலை சூழலே காரணம். இதனை நம் தியான முறையில் மனதை ஒருநிளைபடுத்தி அமரும்போது ஐம்புலன்களும் அமைதி பெற்று நமது என்ன அலை சுழல் (8 CYCLES TO 13 CYCLES) வரை நம் என்ன சுழல் குறைந்துவிடும். இதனையே (ALPHA MIND) ஆல்பா நிலை மன நிலை என்று கூறுகிறோம். இந்த நிலையில் நம் சிந்தனை எப்போதும் இருக்க பழகிகொண்டால் நம் வாழ்க்கையை குழப்பமில்லாமல் அமைதியாகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் நாம் கற்று பயன்படுத்திகொள்ளலாம்.
நம் உடலில் ஒரு நிமடத்திற்கு சராசரியாக 15 முறை சுவாசம் நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 900 முறை சுவாசம் நடைபெறுகிறது. மனிதனாக பிறந்த நமக்கு ஒரு நாளைக்கு சுமார் 21600 தடவை சுவாசம் நடைபெறுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் இந்த சுவாசம் நம் உணர்விற்கு அப்பாற்பட்டு தானாகவே இயங்குவதுதான். இது இறை செயல். காலை சூரிய உதயம் ஆரம்பத்தில் ஒரு மணி இருபது நிமடங்களுக்கு வலது நாசியிலும் அடுத்த ஒரு மணி இருபது நிமிடங்கள் இடது நாசியிலும் மாறி மாறி சுவாசம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. வலப்புற நாசியில் இயங்கும் மூச்சை சூரிய நாடி என்றும் இடப்புறம் இயங்கும் நாசியை சந்திர நாடி என்றும் கூறுவர். சில சமயங்களில் இரண்டு நாசியிலும் ஒன்று கூடி சுவாசம் நடைபெறும். இதனை சுழுமுனை என்றும் கூறுவர்.
இது போல் பூமி தன்னை தானே சுமார் ஆயிரம் மைல் வேகத்தில் சுற்றிகொண்டிருக்கிறது. மேலும் அது சூரியனை ஒரு நாளைக்கு சுமார் 16 லட்சம் மைல்கள் வரை இந்த பிரபஞ்சத்தில்(SPACE GALAXY)யில் பயணம் செய்துகொண்டிருக்கிறது. இதனை என்றும் உணர்ந்தபாடில்லை. இது போல் நாம் ஏராளமான, உண்மையான இயற்கை நிகழ்வுகளை புரிந்துகொள்ளவும் இல்லை.
நம் வாழ்க்கை நாம் பிறந்த இடம், வளர்ந்த விதம், தாய் தந்தை, மொழி, அமையும் நண்பர்கள், உண்ணும் உடை, வாழும் முறையை பின்பற்றுவது, சுற்றுப்புற சூழல், சிந்திக்கும் தன்மை ஆகிய அமைப்பின் மூலமாக நாம் கற்றுகொண்டதை பின்பற்றி வாழ்ந்து வருகிறோம். பிறப்பால் அனைவரும் சமமாக இருந்தாலும் நான் மேலே சொல்லிய விதத்தில் ஜாதி, மதம், இனம், மொழி, குணம், தகுதி ஆகியவற்றினால் நாம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகின்றோம்.உதாரணமாக இங்கு இந்தியாவில் ஒருவன் ஒரு கூலித்தொழிலாளி வீட்டில் பிறந்த ஒருவன் ஒருவேளை இங்கு பிறக்காமல் அதே நேரத்தில் அமெரிக்காவில் BILL GATES பில் கேட்ஸ் குடும்பத்தில் பிறந்திருந்தால் அவன் மொழி, நடை, உடை, பாவனை, உண்ணும் உணவு, வழிபடும் கடவுள், வாழும் முறை அனைத்தும் வேறுபட்டிருக்கும். ஆனால் இந்த வாழும் முறையில் மாறுபட்டாலும் மனிதன் இயற்கை தன்மை அதாவது ஒவ்வொரு மனிதனின் சுவாச முறை மாறாது. எல்லா மனிதனும் மூக்கிலே தான் சுவாசிக்கிறான். அனைவருக்கு சூரிய ஒளி காந்த அலை கதிவீச்சு உயிர் வாழ அவசியமாகிறது. உண்ணும் உணவு முறை வாயினால் சாப்பிடுவதும், அது ஜீரணம் ஆவதும் ஒரே முறையில் தான். அவன் காலை கடன் முடிப்பதும் ஒரே முறையில் தான். அவன் அமெரிக்காவில் பிறந்தாலும் ஆண்டிபட்டியில் பிறந்தாலும் இதே நிலைப்பாடு தான். தனது கடவுள் மற்றும் இயற்கை நம்மை சமமாக படித்திருந்தாலும் மனிதன் சிந்திக்கும் திறனால், நம் முன்னோர் இருந்த நிலையினால், அவர்கள் செய்த தொழிலால் தான், தனது என்ற கடும்பற்றும், உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்ற வேற்றுமையை வளர்த்துகொண்டான்.
புத்தர், இயேசு, நபிகள் நாயகம் போன்ற அனைவருமே சமநோக்கு சிந்தனையுடன், அன்பு, கருணை, ஈகை ஆகிய நல்ல பண்புகளோடு வாழ்ந்து காட்டினர். இறைஅம்சம் ஆனார்கள்.
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள்ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”
அன்பும், கருணையுடனும் வாழ்ந்தால் இறைவனை நோக்கி நம் பயணம் செய்யலாம். அதே சமயம் ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருப்பதால் நாம் அனைவரும் குறையில்லாமல் செல்வம் சேர்த்து வாழ்வை நடத்துவது அவசியமாகிறது. செல்வம் சேர்த்துக்கொண்டே இருப்பதால் நாம் நமது நேர சுதந்திரத்தையும், குடும்பத்துடன் நாம் செலவு செய்யும் நேரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் நம் தேவைக்கு செல்வம் சேர்க்க முயற்சிக்கும்போது, நமக்கு போதுமென்ற மனமும், அடுத்தவருடன் சமன் செய்து பார்க்கும் குணமும் மறைந்து விடுதலும், நிம்மதியும், அமைதியும் சந்தோஷமும் நிலைத்து நிற்பதை பல குடும்பங்களில் பார்த்திருக்கிறோம். ஒருவர் வாழ்வில் பணக்காரர் ஆகவும், நிம்மதி, மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்றால் அவர்களுக்கு நிச்சயம் இரண்டு விஷயங்கள் அவசியமாகிறது. . அது (TIME FREEDOM + FINANCIAL FREEDOM) நேர சுதந்திரம் + பொருளாதார சுதந்திரம். பெரும்பாலோருக்கு ஒன்று இருந்தால் மற்றொன்று நிச்சயம் இருக்காது. அவர்கள் பொருள் சேர்ப்பதை நோக்கி ஓடி கொண்டே இருப்பதால் போதிய நேரம் கிடைக்காமல் கஷ்டபடுகின்றனர். அதே போல் நேரம் அதிகம் கிடைப்பவர்கள் பொருள் இல்லாமல் கஷ்டபடுகின்றனர். வேலை செய்வதில் இரண்டு வகை. (HARD WORK & SMART WORK)கடினமான உழைப்பு & எளிமையான உழைப்பு . உதாரணம் செக்கில் பூட்டிய மாடுகள் எல்லா காலங்களிலும் கடினமாக உழைத்து ஒரே மாதிரி சுற்றி சுற்றி அதே இடத்தில் உழன்ருகொண்டே இருக்கும். ஆனால் தண்ணீரில் நீந்தும் வாத்து வேகமாக நீரில் நீந்தி செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். நீரின் மேலே இருக்கும் வாத்து எந்த அசைவும், சிரமும் இன்றி மோட்டார் படகு போல செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அது தண்ணீருக்கு அடியில் அதன் கால்களை கடுமையாக அசைத்து நீந்துவது தண்ணீருக்கு மேல் தெரியாது. இரண்டுமே உழைப்பு தான்.
Comments