top of page

ஜோதிடத்தில் விஞ்ஞான பார்வை

  • Writer: sivabrahmmam96
    sivabrahmmam96
  • Jan 28, 2016
  • 4 min read

ஓர் அறிவு தாவரம் முதல் ஆறு அறிவு மனிதன் வரை இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளும் பஞ்ச பூத நவக்ரகஹங்களின் தொகுப்பே ஆகும். நீர், நிலம், நெருப்பு காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூட்டமைப்பு தான் மனிதன். நிலம் என்ற மண்ணின் சாரமாக நம் உடலில் உள்ள சதை, நீரின் சாரமாக நம் உடலில் பாயும் ரத்தமும், வேர்வையும், நெருப்பின் சாரமாக நம் உடலில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் உஷ்ணம் 98.6 degree, காற்றின் சாரமாக நம் சுவாசம், மற்றும் ஆகாயத்தின் அணைத்து இடத்தில பரவி இருக்கும் காந்த அலையை வான்காந்த அலை என்பது போல் நம் உடலில் நம் மனமாக, எண்ணமாக இயங்கி கொண்டிருக்கும் உயிரின் ஜீவா காந்த அலை. இதுவே மனிதன் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்புக்கு சான்று. செடி, கொடி, மரத்திற்கு வசந்தகாலம், இலையுதிர்காலம் மாறுவது இயற்கையின் நீதி. அதி போல் இந்த பிரபஞ்சத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் கோடானகோடி நட்சத்திரங்களின் காந்த அலை கதிர்களும், கிரகங்களின் காந்த அலை கதிர்களும், நம் பூமியில் வீசிகொண்டிருக்கின்றன. இந்த காந்த அலை கதிர்வீச்சினால் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

“மாற்றங்கள் நிறைந்தது மனித வாழ்க்கை

மாறாதவன் மாண்டு போவான் “

என்ற சொல்லுக்கேற்ப எல்லா நட்சத்திரங்களும், கோள்களும் நம் பூமியில் இயங்கிக்கொண்டே வலம்வந்து கொண்டிருப்பதால், அதன் தாக்கம் அருகில் வரும்போது, தூரம் செல்லும்போதும், அந்த கதிர் வீச்சின் ரசாயன மாற்றம் மனிதனாகிய நம் உடலுக்கும், மனதுக்கும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக நம் அனைவருக்கும் தெரிந்த சூரியன் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூலபொருள். சூரியன் கதிர்வீச்சு இந்த பூமியில் இல்லையெனில் இந்த பூமியில் ஜீவராசிகள் இல்லை. சித்திரை மாதம் சூரியனின் கதிர்வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும். கத்திரி எனும் அக்னி வெய்யில் கொளுத்தும். இதனையே ஜாதகத்தில் நாம் கட்டமாக பார்க்கும்போது சூரியன் உச்சத்தில் இருக்கிறார் என்று பொருள். உச்சம் என்றால் மிகவும் பலமாக இருக்கிறார் என்று பொருள். அதே போல் ஐப்பசி மாதம் சூரியனை நாம் சரியாக பார்க்கவே முடியாது. சூரியனின் வலிமை இழந்த கதிர்வீச்சை நம்மால் உணரவ முடியும். இதை ஜோதிட பார்வையில் சூரியன் நீச்சம் என்று கூறுகின்றனர்.

நாம் சுருவயத்தில் படித்ததுபோல் நம் பூமியின் அருகில் இருக்கும் சூரியன் ஒரு நெருப்பு கோலம். அது பூமியை விட சுமார் 16 லட்சம் மடங்கு பெரியது. சூரியனை முறையே புதன், சுக்ரன், பூமி, சந்திரன், செவ்வாய், குரு, சனி என்ற ஜட, உலோக பொருட்களாலான கிரகங்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இதை நம் சூரிய குடும்பம் solar system என அழைக்கின்றனர். இது போல் நாம் பார்க்கும் கோடானகோடி நட்சத்திரங்களில் இருந்தும், அணைத்து கோள்களில் இருந்தும் காந்த அலை கதிர்கள் எப்போதும் நம் மீது பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

மருத்துவர்கள் நம் சுவாசத்தில் ஆக்ஸிஜன் உள்ளே செல்வதாக கூறுகின்றனர். ஆனால் யோகிகளும், மகான்களும், ரிஷிகளும் நம் ஆக்சிஜன் உடன் அனைத்து கிரகங்களின் காந்த அலை கதிர்களும் உள்ளே பாய்கின்றன என உணர்ந்து இருக்கிறார்கள்.

கோடானகோடி நட்சத்திரங்களில் இருந்தும், கிரகங்களில் இருந்தும் அலை பாய்ந்தாலும் நம் பூமியின் அருகில் இயங்கி கொண்டிருக்கும் நவகிரகங்களின் காந்த அலை கதிர் வீச்சினை நம் முன்னோர்கள் ஜோதிடத்தின் கணக்கில் எடுத்துகொன்டனர். காரணம் பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரத்தின் காந்த அலை தாக்கம் மிகவும் வலிமையற்று வந்து சேருகின்றன. ஆனால் பூமியில் இருக்கும் சூரிய குடும்ப கிரக கதிர் வீச்சு நம்மை அருகிலும், வேகமாகவும், நேரிடையாகவும் நம் மீது பாய்கின்றன. சூரியனும், சந்திரனும் நம் கண்ணுக்கு தெரிகின்றன. நிலா இரவில் வரும் என்று சொல்வர். நிலா என்ற கிரகம் பகல் முழுவதும் இருக்கும். நம் சூரிய வெளிச்சத்தில் நம் கண்களுக்கு சரியாக புலபடாது. இதை தவிர மற்ற கிரகங்களும் கண்ணுக்கு சரியாக புலப்படாது.

நவக்கிரக அடிப்படையில் ராகு, கேது என்பது ஜோதிடத்தில் கிரகம் அல்ல. அது நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் என்று சொல்வர். அதற்கு கரணம் சூரியன் தன்னை தானே சுற்றிகொண்டிருக்கும் பொது அதன் சிதைந்த அடர்ந்த அணு

சிதைவுகள் நடுமையத்திற்கு தள்ளபடுகின்றன. மேலும் அது திணிவுபெறும்போது சிதைவுகள் அழுத்தம் பெற்று கரும்புகையாக மாறி சூரியன் நடுமையத்தில் இருந்து வெளிவருகின்றன. அந்த கரும்புகை இயங்கிகொண்டிருக்கும் அனைத்து நட்சத்திரங்களையும், கிரகங்களையும் தாண்டி மேல் எழும்பி இயங்காமல் இயக்கி கொண்டிருக்கும் நிசப்தமான கும்மிருட்டு எனும் சுத்தவெளி நோக்கி பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. இதனை ஒரு புறம் ராகு என்றும், மறுபுறம் செல்லும் கரும்புகையை கேது என்றும் கூறுகின்றனர். இது நீளமாக செல்வதால் நாம் அதை பாம்பு என்று கூறிகொள்கிறோம்.

நாம் பிறந்தபோது பூமியிலிருந்து ஒவ்வொரு கிரகங்களின் தூரம், காந்த அலை பதிவை எவ்வாறு பெற்றிருந்தோமோ அதை தொடர்ந்து ஒவ்வொரு கோளும், பூமிக்கு அருகில் வரும்போதும் விலகி செல்லும்போதும் உடலிலும், மனதிலும் வெவ்வேறு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் சந்திக்கும்போது பௌர்ணமி மற்றும் அமாவாசை எனபடுகிறது. அது போல் ராகு, கேது காந்த அலை பாதையில் சூரியன் மற்றும் சந்திரன் வலம் வரும்போது முறையே சூரியகிரஹனம், சந்திரகிரஹனம் எனபடுகிறது. எந்த காந்த அலை கதிர்கள் கலப்பதால் பல மாற்றங்களை நாம் நேரிடையாக உணர்ந்திருக்கிறோம். பௌர்ணமி, அமாவசை வேளைகளில் கடல் அலை அதிகமாக பெருகுவதையும், மாடுகள் இனபெருக்கத்திற்காக கத்துவதையும், மன இறுக்கமாக உள்ளவர்கள் இந்த வேளைகளில் மேலும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பதையும் நாம் கண் கூடாக பார்த்து இருக்கிறோம்.

ஒரு கோள் மற்றொரு கோள் காந்தத்துடன் இணைந்து வரும்போது ஒரு வகையிலும் மாறிவரும்போது வேறு வகையிலும் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு கிரகம் அதன் காந்த அலை வீசும்போது அந்த கோளின் காந்த அலை வீசும்போதும் அந்த கோளின் காந்த துகள்களுடன் நம்மை வந்து மோதுகின்றன. ஒவ்வொரு உயிரும் பிறந்தபோது எண்ண காந்த அலை பதிவை (கருவமைப்பு) பதிவு dna பெற்றிருந்தோமோ அதற்கு ஏற்றாற்போல் அனைத்து ஜீவனும் கோள்களின் காந்த ஆற்றலை பெற்றுகொள்கின்றன. மேலும் உணவு, காற்று பூமியின் நடுமைய மேற்பரப்பின் சக்தி ஆகிய ஆற்றல்களில் தனக்கு வேண்டியதை எடுத்துகொள்கின்றன. இதற்கு ஏற்றாற்போல் மனிதனுக்கு மனிதன் சிந்திக்கும் திறன், குணம், மனம், சுவை, சொல், செயல், நடை, உடை, பாவனை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. இப்போதும் நமக்கு ஒரு கேள்வி வந்து கொண்டிருக்கும்.’காந்த அலை என்றால் என்ன’? உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றை சுயமாக சிந்திப்போம். சூரியன் வெப்பமான நெருப்பு கோளம் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அதன் வெப்பம் சுமார் 40 டிகிரி வரை பூமியில் இருப்பதை உணர்கிறோம். நாம் 25000 அடி மேலே செல்கிறோம் என்று வைத்துகொள்ளுங்கள். இப்போது பூமியின் வெப்பம் 40 டிகிரி ஆக இருக்கும்போது மேலேயிருந்து வரக்கூடிய சூரிய வெப்பம் மேலும் மேலும் அதிகமாக வேண்டும். ஆனால் நாம் மேலே செல்ல செல்ல வெப்பம் அதிகம் ஆகாமல் குளிர்ச்சி அடைவதை மலைகளின் உச்சிக்கு செல்ல செல்ல உணர்கிறோம். ஆக வெப்பம் மெல்ல செல்ல செல்ல குளிர்ச்சியாக மாறுவதற்கு என்ன காரணம். மேலே இருந்து வந்து கொண்டிருப்பது வெப்பம் என்றால் நடுவழியில் குளிர்ச்சியாக மாறி மீண்டும் வெப்பம் உயர வாய்ப்பில்லை. ஆகவே சூரியனின் வெப்பம் கீழே வரவில்லை. சூரியனின் காந்த அலை தான் (சூரியனின் வெப்பம்+ஒளி+ஆற்றல்)தன்மை அலையோடு வந்து பூமியை மோதுவதால் அதன் ரசாயன மாற்றம் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரத்தில் இருந்தும், கோள்களில் இருந்தும் வீசிகொண்டிருக்கும் அலையே காந்த அலை எனப்படும். எந்த காந்த அலைகள் மனிதன் மீது மோதுவதால் அதன் ரசாயன மாற்றம் உடலிலும், மனதிலும், சிந்தனையிலும், செயலிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கின்ற கோடான கோடி நட்சத்திரங்களில் சூரிய வட்ட பாதையில் வலம் வரும் 27 கூட்ட நட்சத்திரத்தின் தொகுப்பை முன்னோர்கள் பிரித்திரிக்கின்றனர். ஒவ்வொரு தொகுப்பையும் ஒரு நட்சத்திரத்திமாக பாவித்து இருக்கின்றனர். முறையே அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகஷீரசம், திருவாதிரை, புனர்புசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி. ஆகும். இந்த பிரபஞ்சத்தை 12 பாகமாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக 12 ராசிகளாக பிரித்து 27 நட்சத்திரங்களை 12 ராசிகளில் அமைத்தனர். கோள்களின் அலைகதிரும், நட்சத்திரத்தின் அலைகதிரும், கலந்து வீசும் ரசாயன மாற்றம் நம் வாழ்வியல் மாற்றத்திற்கு மூல காரணம்.


 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2015 by Sivabrahmmam. Proudly created with Wix.com

  • Facebook Classic
  • Twitter Classic
  • Pinterest Classic
  • YouTube Classic
  • Google+ Classic
  • Blogger Classic
bottom of page