ஆமை
- sivabrahmmam96
- Jan 29, 2016
- 1 min read

ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் விளங்காது என்று கூறுவர்: சிந்திப்போமா: ஆமை வீட்டில் புகுந்தால் தரித்திரமா? ஆம் தரித்திரமே நமக்கல்ல ஆமைக்கே.
காரணம் நம்மிடம் மாட்டிய ஆமை உயிருக்கு ஆபத்து.
ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை ஒவ்வொரு ஜீவ ராசி பிறந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.
அதன்படி ஆமை அறிவுக்கு மேல் முதலை நாய் சிங்கம் குரங்கு பின் சிம்பண்ஸீ பின் மனிதன் தோன்றினான்.
அப்படி பார்த்தால் நாமும் தரித்திரமே. முற்காலத்தில் ஆமை என்ற உயிரின் ஆற்றலும் மனிதனுடன் ஒளிந்து இருக்கிறது.
ஆமைக்கு நன்மை தீமை தெரியாது. ஆனால் நமக்கு தெரியும். ஆமை மூச்சு விடும் முறை மிகவும் மெதுவாக.
நம்மை விட ஆமைக்கு ஆயுள் அதிகம்.300 ஆண்டுகளுக்கு மேல் வாழும்.
நம்மை விட அறிவில் குறைந்த ஆமையை 6 அறிவுடைய நாம் அதை தரித்திரம் என்று நினைக்காமல் அதனை சாகடிக்காமல் உயிருடன் பத்திரமாக அது வாழும் வசதியான இடத்தில் விட்டு விட்டால் உயிரை காப்பாற்றியே புன்னணியமும் அதிர்ஸ்டமும் நம்மை சேரும்.
ஆமை வீட்டில் புகுந்தால் தரித்திரம் என்பதற்கு ஜோதிடர்கள் கூறும் விளக்கம் :
வீடு அடியில் பூமியில் ஏராளமான எலும்பு கூடுகள் இருந்தால் அந்த வீடு தரித்தரம் இதனை உணர்ந்த ஆமை வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது என்கின்றனர்.
நமது பார்வையில்:
பூமி தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகின்றது. பூமிக்கு அடியில் பெட்ரோல் - டீசல் - நிலகரி - ராசாயனம் - கனிம பொருட்கள் - நீர் - நெருப்பு - கல்- மண் பல கோடி ஆண்டுகளாக மனிதர்களின் இறந்தவர்களின் எலும்புகள் பூமி எங்கும் நிரம்பி இருக்கின்றன. மண்ணில் தோன்றிய அனைத்தும் மண்ணில் மறைவது இயற்க்கை நீதி. பிறப்பும் இறப்பும் தேவ ரகஸியம். சிந்திப்போம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு. மாதிரி யோசிப்போம் - உண்மையை.
மேலும் கேரளாவில் பெரும்பாலும் ஆமை வடிவிலே குத்துவிளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவார்கள். மாங்காடு போன்ற கோயில்களிலும் ஆமை வடிவம் இடம்பெற்றிருக்கிறது.
Comments