top of page

இறை வழிபாடு

  • Writer: sivabrahmmam96
    sivabrahmmam96
  • Feb 13, 2015
  • 6 min read

பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம் இறைவனை தன் சுயநலத்திற்க்காக மட்டுமே வழிபாடு செய்து வருகின்றனர். யானைக்கு மதம் பிடித்தால் தன்னிலை மறந்து அனைத்தையும் தூக்கி போட்டு மிதிக்கிறது. மதம் என்றால் வெறி என்ற மற்றொரு பெயரும் உண்டு. மதம் என்ற பேரால் நாட்டில் இன்று பல பிரச்சனைகள் பெருகிகொண்டே வருகிறது.

இறை சக்தி அனைவரையும் சரி சமமாக படை த்திருந்தாலும் மனித வர்க்கம் தன் சுயநலத்தாலும், பேராசையாலும், இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதாலும் இறைசக்தியை பெறமுடியவில்லை. மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையை (identity ) ஏற்படுத்தி பெருமை கொள்கிறான்.

எனக்கு தெரிந்த வேற்று மத நண்பர் வீட்டில் ஞாயிறு தோறும் ஆலயத்திற்கு கட்டாயம் போகவேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துகின்றனர். தன் குழந்தைகள் ஆலயம் செல்லவில்லை என்றால் உங்களுக்கு நரகம் தான் கிடைக்கும் என்றும் சொர்கத்திற்கு நீங்கள் செல்லவேண்டும் என்றால் விடாமல் ஆலயத்திற்கு போகவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இது போல் பல பேர் ஆலயத்திற்கு சென்று attendance கொடுத்தாலே சொர்கத்தை அடைந்து விடலாம் என்று போதனை செய்கின்றனர். இவர்கள் போல் நிறைய பேர் ஆலயம் சென்று ATTENDANCE கொடுத்தால் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் செல்கின்றனர். அவர்களுக்கு தெரியவில்லை ஆலயம் சென்று அங்கு ஆலயம் முழுதும் பரவி இருக்கும் தெய்வீக ஆற்றலை நாம் அமைதியுடன் பெற்றுகொண்டால் நமக்கு வாழும்போதே சொர்க்கம் நிச்சயம் என்று. புனித நூலின் சாராம்சம் அன்பும் , கருணையும் - அண்டை வீட்டாரை நேசி என்ற வாசகம் இந்த கலியுகத்தில் பலர் பின்பற்றி வாழ்வதில்லை. அவரவர் தன் மதத்தினருடன் இணக்கமாக பழகினாலும் ஒருவர் முன்னேற்றமும் - வளர்ச்சியும் இன்னொருவருக்கு பொறாமையும் கவலையும் ஏற்படுத்தவதே தற்கால உண்மை அவலம். தொலைகாட்சியில் ஒரு பெண் கூறுகிறார் ' நான் ஞாயிற்றுகிழமைகளில் ஆலயம் போகும்போது அனைவரும் என்னை ரசிக்கும்படி மிகவும் அழகாகவும் - உயர்ரகமான சேலையை உடுத்தி செல்வேன். அப்போது தான் அனைவரின் பார்வையும் என்மீதே இருக்கும் என்றார். புனித இடமான ஆலயத்தில் இறைவன் என்ற மகாசக்தியை தவிர வேற எந்த விதமான சக்திக்கும் இடமில்லை என்பதை அவர் உணரவில்லை. ஆலயம் சென்று வணங்கி அங்கு முழுவதும் பரவி இருக்கும் இறைவனின் சக்தியை - புனித நூல்களின் உண்மை விளக்கத்தை கேட்டு - புரிந்து - உணர்ந்து - பயன்படுத்தினால் வாழும் ஒவ்வொரு நாளும் சொர்க்கமே என்பதை அனைவரும் உணர்வோமாக.

ஒரு நாள் வெள்ளிகிழமை நானும் இன்னொரு மதத்தினை சார்ந்த என் நண்பரும் கூட இன்னும் சில நண்பர்களும் அதிகாலையிலே காஞ்சிபுரத்திற்கு காரில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தோம். காலையில் இருந்தே நாங்கள் யாரும் சாப்பிடவில்லை. மதிய வேளை ஆகிவிட்டதால் அனைவருக்கும் களைப்பும் பசியும் தாகமும் அதிகரித்துகொண்டே இருந்தது. நாங்கள் என் வேற்று மத நண்பரின் கார் டிரைவரும் எங்களை நடுவழிலே இறக்கி பரிதவிக்கவிட்டு சாமி கும்பிட சென்றுவிட்டனர். நாங்கள் அனைவரும் அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் பசியுடனும், தாகத்துடனும் காத்துகொண்டிருந்தோம். பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து அவர்கள் சாமி கும்பிட்டு திரும்பி வந்து காரை எடுத்தனர். இதில் என்ன வருத்தம் என்றால் கண்ணெதிரே தனது நண்பர்கள் பசியும், களைப்பும், கஷ்டமும் அனுபவிப்பதை கொஞ்சம் கூட உணராத வகைளில் அவர்கள் இறைவனை வழிபட்ட மகிழ்ச்சியில் அவர்கள் சுயநலமாக அங்கலாய்த்து கொண்டு இருந்தனர்.

என் நெருங்கிய நண்பர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக இறைவனுக்கு மாலை அணிந்து வருடா வருடம் பூஜைகள் செய்து கோயிலுக்கு சென்று வருகிறார். இதுவரை யாருடைய கஷ்டங்களையும் உணர்ந்தவரில்லை. சுயநலம் ஒன்றே அவர் வாழும் முறை. ஆனால் கடவுள் மீது அதீத நம்பிக்கை உடையவர். தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்போதும் அழவைத்து கொண்டும், எல்லா செயலுக்கும் தன்னை நியாயபடுத்தி மற்றவர் மீது கடும் சொற்களை கூறியும், தகாத நடத்தையும் மற்றும் கோபமும் அவர் உடன் பிறந்த குணம். இத்தனை ஆண்டுகள் கடவுளை தன் உடலையும் உள்ளத்தையும் வருத்தி தரிசனம் செய்தும் ஒரு நல்ல குணம் கூட அவரிடத்தில் காணமுடியவில்லை. எப்போதும் சுயநலமாகவும், பரபரப்பாகவும், கோபத்துடனும் அவர் காணபடுவார். தனக்கு வேலை ஆகவேண்டும் என்றால் பழக்கம் இல்லாத ஆட்களிடம் கூட வேலை வாங்கிகொள்வார். மற்றவர் பசியோ, மற்றவர் தேவைக்கோ உதவி செய்ய இதுவரை அவர் மனதில் சிறு எண்ணம் கூட ஏற்பட்டதில்லை.

மறை நூல் அனைத்துமே அன்பும், கருணையுமாக வாழவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. எங்கே சென்றது "மனித நேயம்". இறைவன் பேரால் தான் தனது என்ற கடும்பற்று, கொலை, கொள்ளை, வஞ்சம், உயர்வு - தாழ்வு மனப்பான்மை இது நாள் வரை தீர்ந்தபாடில்லை. கோயில்களில் தர்மகர்த்தாவாக இருக்கும் ஒரு சிலர் ஆணவமாகவும், கர்வமாகவும் நான் தான் பெரியவன் என்ற எண்ணத்தில் வாழ்வதை நாம் பல கோயில்களில் கவனித்து இருக்கிறோம். இறைவன் மிக மிக பெரியவன். அவனிடத்தில் மனிதனாக பிறந்த நாம் அனைவரும் மிக சிறியவர்கள். கோயில்களில் தரிசனம் காணவரும் பக்தர்களை சமமாக நடத்தினால் இந்த கோயில்களை நடத்துபவர்கள் நிச்சயம் பெயருக்கேற்றார் போல் "கோயில் தர்மகர்த்தா" தான். நம் நாட்டில் தான் சாமியை தரிசனம் செய்ய கூட பணம் வாங்குகிறார்கள். இதில் இறைவனை தரிசிக்க பண வித்தியாசத்தில் vip வரிசை - ஸ்பெஷல் வரிசை - சாதாரண வரிசை என ஹோட்டல்களில் தோசை விற்பது போல இறைவனுக்கு விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். இறைவன் ஒரு மஹாசக்தி. நம் அனைவரையும் படைத்தவன் இறைவன் ஒருவனே என்பதை நாம் எக்காலமும் மறந்துவிட கூடாது.

தற்போது நாகரீக உலகில் எந்த கோயிலில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சக்தி வாய்ந்த கோயில் என்ற முத்திரை குத்திவிடுகின்றனர். ஓஊ பொருட்காட்சி சென்று பிரம்மாண்டத்தை ரசிப்பது போல் பெரும்பாலானவர்கள் கோயிலுக்கு செல்கின்றனர். மேலும் பல புதிதாக முளைத்திருக்கும் சில ஆலயங்களில் சூன்யம் என்ற விஷத்தை பறை சாற்றி விஷம் என்ற செடிகளை வளர்த்துகொண்டு வருகின்றனர். இறைவனை வணங்குவதால் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவடைய வேண்டுமே அன்றி மேலும் குழப்பங்களை உருவாக்கிகொள்ள கூடாது என்பதனை அனைவரும் உணரவேண்டும்.

இக்காலங்களில் இறை பக்தர்களிடையே என்னுடைய குழு பெரியதா உன்னுடைய குழு பெரியதா என்ற போட்டி எல்லா இடங்களிலும் தலை விரித்தாடுகிறது. நிறைய இறை பக்தர்கள் பாக்கு போடுவது, குடிப்பது அவர்கள் வாழ்க்கை ஆகிவிட்டன. சிலர் எல்லா கோயில்களையும் தெரிந்துகொண்டு அங்கு வாரவாரம் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். ஆனால் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் தலை விரித்தாடுகிறது. நிறைகுடம் தளும்பாது. இறைவனிடம் செல்ல செல்ல அமைதியும், அன்பும், பண்பும் மேலோங்க வேண்டும். இறைவனை தரிசிப்பது நம் நோக்கம். இறைவனின் ஆற்றலை நமது உயிரில் கலக்க நமது உடலும் உள்ளமும் முழுவதுமாக இறைவனிடம் பணியவேண்டும்.

சொர்க்கம் - நரகம் :

இறந்துபோன மனிதன் ஒருவன் வானுலகத்திற்கு சென்றான். வானுலகத்தில் அவன் நரகத்தை கண்டான். நரகத்தில் ஏராளமான மனிதர்கள் எலும்பும் தோலுமாக மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். அங்கே 4 அடி அகலமுள்ள நீளமான மேஜை போடபட்டிருந்தது.மேஜையின் இருபுறமும் அந்த மனிதர்கள் அமர்ந்து இருந்தனர். மேஜையில் நிறைய பழங்கள் - இனிப்புக்கள் - பலகாரங்கள் குவிக்கபட்டிருந்தன. மனிதர்கள் அனைவரின் இரு கைகளிலும் 4 அடி நீளமுள்ள fork கரண்டி கட்டபட்டிருந்தது. அந்த கரண்டியில் பழங்களையும் பலகாரங்களையும் எடுத்து சாப்பிட முயற்சி செய்துகொண்டிருந்தனர். கரண்டி நீளமாக இருப்பதால் அந்த உணவு அவர்கள் வாய்க்கு எட்டவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தும் அவர்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. அவர்கள் உணவருந்த முடியாமல் நாளுக்கு நாள் இளைத்து சிறிது சிறிதாக உயிரை விட்டுகொண்டிருந்தனர்.

பிறகு இறந்துவிட்ட மனிதன் சொர்கத்திற்கு சென்றான். அங்கே அவன் நரகத்தில் பார்த்தது போலவே நீண்ட 4 அடி அகலமுள்ள மேஜையும் அதற்கு இருபுறமும் ஏராளமான மனிதர்கள் அமர்ந்து இருந்தனர். அதே போல் பழங்களும், இனிப்புகளும், பலகாரங்களும் மேஜை மீது குவிக்கபட்டிருந்தன. மனிதர்கள் கைகளில் நரகத்தில் மனிதர்கள் கையில் கட்டபட்டிருந்த கரண்டி போலவே இவர்களுக்கும் கட்டபட்டிருந்தன. சொர்க்கத்தில் அணைத்து மனிதர்களும் கொழு கொழுவென்றும் சிரித்து சிரித்து பேசியும் சந்தோசமாக இருந்தனர். காரணம் அவர்கள் நரகத்தில் இருக்கும் மனிதர்கள் போல கரண்டியில் தானே உண்ண முயற்சி செய்யாமல் கரண்டியில் உணவை எடுத்து எதிரே அமர்ந்திருக்கும் நபருக்கு ஒருவர் மாற்றி ஒருவர் உணவை ஊட்டி பகிர்ந்து உண்டுகொண்டிருந்தனர்.

இந்த கதையின் கரு நாம் பிறருக்கு உதவி செய்தாலே நாள்தோறும் சொர்க்கத்தில் வாழலாம் என்பதே.

"அன்பிலார் எல்லாம் தமுக்குரியர்

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு".

நமது இறைவழிபாடு முறையை நாம் முற்றிலும் உணராமல் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து இறைவனை வேண்டுகிறோம். உணர்ச்சி வசப்படும்போது நமது அறிவு ஐந்தறிவு நிலைக்கு நம்மை தள்ளப்பட்டு விடுகிறது. இதனால் தான் நாம் கோயில்களில் பரவச நிலையை அடைந்துவிடுகிறோம்.

"நீ அமைதியாக இரு - இறைவன் உன்னிடம் பேசுவான் " என்ற வார்த்தைக்கு மாறாக சாஸ்திர சம்பிரதயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் அமைதியான தெளிவான ஆலய வழிபாட்டிற்கு நாம் கொடுப்பதில்லை.

"ஒரு கோடி மந்திரம் ஒரு ஜெபம்

ஒரு கோடி ஜெபம் ஒரு பூஜை

ஒரு கோடி பூஜை ஒரு லயம் "

ஆம் லயம் என்றால் லயித்தல். ஆழ்ந்த அமைதியான ஒருமுக படுத்திய கவனிப்பு என்று பொருள்.

ஆலயம் = ஆ + லயம்

ஆ என்றால் ஆன்மா

லயம் என்றால் ஒடுங்குதல்

ஆன்மா ஒடுங்குதல் என்று பொருள்.

நிறைய பேர் திருப்பதி, வேளாங்கண்ணி, பழனி கோயில்களுக்கு பாத யாத்திரை செல்லும்போது தேவை இல்லாத ஊர் கதைகளையும், வெட்டி பேச்சிகளையும் பேசிக்கொண்டு பாதயாத்திரை செல்வதை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். இதில் என்ன பலன் அவர்களுக்கு கிடைக்கும். ஆன்மா லயபடவில்லை.

நம் முன்னோர்களும் சான்றோர்களும் மிகவும் சக்தி வாழ்ந்தவர்கள். ஞானமும் அறிவும் ஒருங்கே பெற்ற மகான்கள் அவர்கள். ஆதம விதிப்படி திருகோயில்களை அமைத்து அந்த தெய்வீக கோயில்களில் பிரபஞ்ச மஹா சக்தியை இழுக்கும் வகையில் அமைத்துள்ளனர். அணைத்து கோயில்களும், சர்சுகளும், மசூதிகளும் பிரமிட் வடிவிலே அமைத்து உள்ளனர். கூம்பு வடிவிலே இருக்கும் எந்த ஒரு பிரமிட் வடிவமும் பிரபஞ்ச சக்தியை (cosmic energy ) உரிந்து இழுக்கும் தன்மையுடையது. மேலும் கூம்பு வடிவில் உள்ள கைல்களின் உச்சியில் செம்பு கலசம், தாமிர கலசம், மற்றும் பஞ்ச லோக கலசங்கள் போன்ற வித விதமான கலசங்களை வைத்து அதற்க்கு நேர் கீழே மூலவர் அமைதி சன்னதியில் மந்திர உச்சாடனங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்வதாலும் அங்கு மகாசக்தி பெருக்கெடுத்து குவிந்து அந்த கோயிலுக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக சமீபத்தில் (nasa) நாசா விஞ்ஞானிகள் சனி பகவான் திருத்தலமான 'திரு நள்ளாறு ' கோயிலுக்குள் முகாமிட்டு ஆராய்ச்சி செய்ததில் அந்த கோயிலுக்கு மேலே செல்லும் satelitte 3-4 வினாடிகள் செயல் இழந்துவிடுவதை கண்டுபிடித்து இருக்கின்றனர். அதற்க்கு காரணம் கிட்டத்தட்ட சூரியனிலிருந்து சுமார் 88 கோடி மைலுக்கு அப்பால் வலம் வந்துகொண்டிருக்கும் சனி கிரகத்தின் சாம்பல் நிறமான காந்த அலை கதிர்கள் திருநள்ளாறு கோயிலுக்குள் இழுக்கப்பட்டு குவிந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதுவே இறை சக்தி. சனிபகவானை

தரிசனம் செய்ய செல்லும் லட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலானோர் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இந்த இறை சக்தி பரவி இருப்பதை உணராமல் அர்ச்சனை செய்வதிலும், கோயிலில் குளிப்பதிலும், கூட்டத்தில் முண்டி அடித்து செல்வதிலும், குளித்த பிறகு துணியை மாற்றுவதிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். மேலும் அங்கே சென்று தனது கோரிக்கைகளை வைப்பதாலும், உணர்ச்சிவய படுவதாலும், பரவச நிலை அடைந்து நான்- நீ என்று போட்டி போட்டுகொண்டு இறைவனை வழிபடுவதால் அவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது வெறும் ஆறுதல் தான் மிஞ்சுகிறது. உண்மையில் அனைவருக்கும் மாறுதல் வேண்டுமென்றால் அனைவரையும் படைத்த இறைனுக்கு அந்த மகா சக்திக்கு கோயிலுக்கு வருபவர்கள் எதற்க்காக வருகிறார்கள் என்று சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. காரணம் உங்களை அங்கே வர வைப்பதே இறை சக்தி தான்.

நாம் கோவிலுக்கு சென்று நம் கவலைகளையும், கஷ்டங்களையும் கோவிலில் தரிசனம் செய்யும் பொது கொட்டி தீர்க்காமல் மன அமைதியான நிலையில் அங்கே குவிந்துகொண்டிருக்கும் பிரபஞ்ச சக்தியை, இறை சக்தியை, மகா சக்தியை உள்ளே வாங்கி கொள்ளவே திருகோயில்களை ஆதம விதி படி அமைத்திருக்கின்றனர். ஆகவே அன்பு உள்ளங்களே தயவுசெய்து கோயிலுக்கு செல்லும்போது யாரிடமும் பேசாமல் மனதில் எந்த சிந்தனையும் இல்லாமல் மனதி அமைதியாக வைத்து கொள்ள முழற்சிப்போம்.

நம் மனது அமைதியாக இருக்கும் போது நம் மூளையில் நடைபெறும் மன சுழல் 14-40 cycle per second சுழற்சியில் இருந்து 8-13 cycle per second சுழற்சி தன்மைக்கு வந்து விடும் (alpha stage )

"ஆறறிவு நிலை என்பது அமைதியும் தெளிவுமான விழிப்பு நிலை "

இந்த நிலையிலே இறைவனை வழிபடும்போது பரவசம் அடையாமலும், கண்களை மூடாமலும், மன அமைதியான நிலையிலே இருந்து கொண்டு " இந்த மகா சக்தி எனக்குள் பாய்ந்துகொண்டே இருக்கிறது - இந்த மகா சக்தி எப்போதும் எனக்கு நன்மையே செய்துகொண்டிருக்குமாக" என்று நம்பிக்கையுடன் பாவனை செய்து அந்த சக்தியை நீங்கள் வாங்கிகொள்ள வேண்டும்.

கோயில்களில் நாம் உணர்ச்சி வயப்பட்டு நம் சக்தியை இழந்து கொண்டிருந்ததால் ஆறுதல் அடைந்த நாம் இப்போது அமைதியான நிலையில் இருந்துகொண்டு அங்கு குவிந்து கொண்டிருக்கும் இறை சக்தியை நம்மில் வாங்கிகொள்வதனால் நமக்கு மிக பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். நாம் எதற்க்காக கோயிலுக்கு சென்றோமோ அந்த பலன் 100% நமக்கு பலன் ஏற்படுவது நிச்சயம். இறை சக்தி நமக்குள் பாய்ந்துவிடும். எப்படி dish antenna - satellite இல் இருந்து காந்த அலைகலை இழுத்து டிவியில் விடுவதால் படம் நன்றாக தெரிகிறதோ அது போல் நம்மீது பாய்ந்த இறை சக்தியால் நம் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.

உதாரணமாக நீங்கள் உங்களது தொலைபேசியில் நண்பரிடம் out going call ல் பேசிகொண்டிருக்கும் போது மற்றாரு நண்பர் உங்கள் தொலைபேசிக்கு அதே நேரத்தில் முயற்சி செய்தால் எப்படி பிஸியாக உங்கள் தொலைபேசி இருக்குமோ அதே போல் நீங்கள் இறைவனை தரிசிக்கும்போது உங்கள் மூளை பிஸியாக ஏதாவது வேண்டிக்கொண்டும், குழம்பிகொண்டும், அழுதுகொண்டும் இருந்தால் இறைவனின் ஆற்றல், சக்தி உங்களிடம் வந்து சேராது.

கோயில்களில் காணும் சிவனடியார்கள் அனைவரும் அமைதியாகவும், அன்பும் கருணையுடன் இருப்பதை நாம் பார்க்கிறோம். மகான்களும் சித்தர்களும் யோகிகளும் அமைதியாகவும் அன்புடனும் வாழ்ந்ததை படித்து இருக்கின்றோம். வேதங்களும், புராணங்களும், மறை நூல்களும், காவியங்களும், இதிகாசங்களும் நாம் அன்புடனும், கருணையுடனும், நல்லொழுக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதையே இறைநிலையாகவும், இறை வழிபாடாகவும் வலியுறுத்துகின்றன.

"கேட்டல் - புரிதல் - உணர்தல் - செயல்படுத்துதல் " = முழுமை பேரு

இன்றைய காலகட்டத்தில் ஹிந்து - முஸ்லிம் - கிருத்துவ மதத்தினர் பெரும்பாலானோர் அவரவர் தெய்வம் தான் உயர்ந்தது என்று மார்தட்டி கொள்கின்றனர். அவரவர் தனது மதத்தினர் உடன் மட்டுமே அதிகமாக பழகுகின்றனர். மேலும் மதத்தை தாண்டி ஜாதி என்னும் கொடிய நோய் தற்காலத்தில் தலைவிரித்தாடுகிறது. இறைவனின் பார்வையில் இரண்டே ஜாதி தான் இருக்கிறது.

" நல்ல குணங்களை உடையவன் நல்ல ஜாதி -

கெட்ட குணங்களை உடையவன் கேட்ட ஜாதி "

மனிதன் எந்த மதத்தில் பிறந்திருக்கிறான் - எந்த ஜாதியில் பிறந்திருக்கிறான் என்பது முக்கியமில்லை. அவன் எப்படி வாழ்கிறான் என்பது தான் முக்கியம். அடுத்தவர் படும் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைபவனும் அடுத்தவர் சந்தோசத்தை தன் சந்தோசமாக உணர்பவனும் என்றுமே உயர்ந்த ஜாதி - மதத்தில் பிறந்தவனாவான்.

அமைதியாக வாழ்ந்த புத்த பெருமான் - இயேசு பிரான் - நபிகள் நாயகம் போன்றோர் அன்பும் கருனையுமாக வாழ்ந்து தேவாம்ச நிலையை அடைந்தனர்.


 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2015 by Sivabrahmmam. Proudly created with Wix.com

  • Facebook Classic
  • Twitter Classic
  • Pinterest Classic
  • YouTube Classic
  • Google+ Classic
  • Blogger Classic
bottom of page