


சிவபிரம்மம்
ஓர் அறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை உயிர்களுக்கு நீர் - நிலம் - காற்று - பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு அவசியமாகிறது. ஆகாயத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள் - கோள்கள் - பஞ்ச பூதம் - உயிரினங்கள் ஆகிய அனைத்து இயக்கமும் சக்தி களம் (Energy) என்றும், இந்த அனைத்து இயக்கத்திற்கும் மூல காரணமாக இருப்பது சுத்தவெளி ஆகும். நமது பூமி ஒரு சூரிய மண்டலத்தில் (Solar System) உள்ளது. கோடிக்கணக்கான சூரியனின் இயக்கமே பால்வெளி மண்டலம் (Milkyway Galaxy). கோடிக்கணக்கான மண்டலங்கள் சேர்ந்து இயக்கமே வான்வெளி பிரபஞ்சம். பிரபஞ்சம் என்பது கடல் என்றால், பூமி என்பது அதில் மிதக்கும் கடுகு போல் ஆகும். மனிதன் உருவம் மிகவும் சிறியது. பிரபஞ்சம் மிகவும் பெரியது. இயங்குகின்ற அனைத்து இயக்கங்களும் இயக்கி கொண்டிருக்கும் சுத்த வெளியில் அடக்கம். "சுத்த வெளி என்பது வெட்டவெளி, சூனியம், பரலோகம், கும்மிருட்டு, ஆதி, அநாதி, பூரணம், பேராற்றல், தூயவெளி, மெய்பொருள், பரம்பொருள், பேரறிவு, முக்தி, வீடுபேரு, முழுமை பேறு, இறைநிலை, சிவம் பிரம்மம் ஆகிறது. சிவ-பிரம்மம் அணுவிலும், அண்டத்திலும், மனிதனுக்குள்ளும் இறை நிலையாக இயங்குகிறது.
“அண்டத்தில் இறைவன்
பிண்டத்தில் மனிதன்"
நமது உயிர் - உடல் - மனம் - கோள்கள் - நட்சத்திரங்கள் கடந்து சென்றால் விரிவடைந்து கொண்டே இருக்கும் சுத்தவெளி. நமது அறிவும் சுத்தவெளி. இறைநிலை, சுத்தவெளி இரண்டும் ஒரே நிலை. சுத்தவெளி மிக பெரியது. நமது உயிர் மிக மிக சிறியது. சுத்தவெளி - சிவம் - பிரம்மம் அனைத்திருக்கும் காரணப் பொருளாக இருக்கிறது. அனைத்து கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இதுவே வீடாகிறது. இதன் பெயர் துவாத சாந்தம்.
இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற உண்மை நிலையை நம் அமைதியான மன அலை மூலம் உணர்ந்து அன்புடனும், கருணையுடனும் வாழ்ந்து வந்தால் நம் வாழ்வில் நிம்மதியுடன் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ்வது நிச்சயம் ஆகும்.
"நம்பினார் கெடுவதில்லை (அறிவு பூர்வமாக)
நான்கு மறை தீர்ப்பு"
புத்தர்பிரான் - இயேசுபிரான் - நபிகள் நாயகம் போன்ற மகான்கள் அன்புடனும், கருணையுடனும் வாழ்ந்து காட்டினர். தெய்வ அம்சம் அடைந்தனர். இவர்களை வழிபடும் நாமும் அவர்கள் வாழ்வியல் முறையின் சிறு அளவையாவது பின்பற்றுவோமாக -
சிவம் - பிரம்மம்!
